×

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும்: அன்புமணி பேச்சு

மேட்டூர்: தமிழகத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் சேர்ந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அன்புமணி பேசினார். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே பொட்டனேரியில், பாமக சார்பில் முப்படைகள் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். இதில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி  பேசியதாவது:  பெண்கள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். தமிழகத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் சேர்ந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் நல்ல பல திட்டங்களை செயல்படுத்த முடியும்.  தமிழகத்தை பாமக ஆளவேண்டும். அப்போதுதான் ஒரு பைசா கூட செலவு செய்யாமல், உயர்கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், செலவின்றி நல்ல மருத்துவ உதவிகள் அனைவருக்கும் கிடைக்கும். பாமக ஆட்சிக்கு வந்தால், 50 லட்சம் இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அன்புமணி பேசினார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், எந்த கட்சி துவங்கினாலும், அடுத்தது எங்கள் கட்சி ஆட்சி தான் என்று கூறுவார்கள். பாமக துவங்கி 30 ஆண்டுகள் ஆகிறது. வேறு கட்சியினர் ஆட்சி செய்ய, நாங்கள் கட்சி துவங்கவில்லை. எங்கள்  கட்சி ஆட்சி செய்யத்தான், பாமகவை துவங்கினோம். வரும் சட்டமன்ற தேர்தலில், நாங்கள் கூட்டணியில் நீடிப்போமா அல்லது யாருடன் கூட்டணி என்பது குறித்து கட்சி நிறுவனர் முடிவு செய்வார் என்றார்.


Tags : Anbumani ,Tamil Nadu ,Nadu , A change of regime in Tamil Nadu: Anbumani talk
× RELATED தெலுங்கு, கன்னட மக்களுக்கு அன்புமணி,...