×

புதிய ஹெல்த் இன்சூரன்ஸிலிருந்து ஓய்வூதியர்களுக்கு சில மருத்துவ சேவையில் விலக்கு: மின்வாரியம் திட்டம்

சென்னை: புதிய ஹெல்த் இன்சூரன்ஸில் சில மருத்துவ சேவையில் இருந்து ஓய்வூதியர்கள் விலக்கு பெற்றுக்கொள்ளும் வசதியினை கொண்டுவர தமிழக மின்சாரவாரியம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உள்ளிட்டோருக்கு புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் கடந்த 2018ல் இருந்து கொண்டுவரப்பட்டது. இதில் பெரும்பாலான ஓய்வூதியர்கள் தங்களுக்கு தேவையில்லாத பயன்களில் இருந்து விலக்கு அளிக்க  வேண்டும் என கூறியிருந்தனர். இதை மின்வாரியம் ஆலோசனை செய்து ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. அதன்படி ஓய்வூதியர்கள் தங்களுக்கு தேவையில்லாத பயன்கள் குறித்த விபரத்தை முறையாக தெரிவித்தால், அதுகுறித்து  பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : New Health Insurance for Pensioners ,Pensioners , Exemption from New Health Insurance for Pensioners in Some Medical Services: The Electricity Plan
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்