×

மாதிரி நீதிமன்றம் போட்டி: சட்ட கல்லூரி மாணவர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பரிசு

சென்னை: சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகத்தில் நடைபெற்ற மாதிரி நீதிமன்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் பரிசு வழங்கினார்.தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தில், பல்வேறு சட்டக்கல்லூரிகள் மாணவர்களுக்கான மாதிரி நீதிமன்றம் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி ‘வரி’யை தலைப்பாக கொண்டு நடத்தப்பட்டது. மாதிரி நீதிமன்ற போட்டி முதலில்  இணையதளத்தின் வழியே நடைபெற்றது. இதில் வெற்றியடைந்தவர்களுக்கான இறுதி போட்டி, நேற்று சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலை கழகத்தில் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. அதில், உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், உயர் நீதிமன்ற அரசு கூடுதல் தலைமை  வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் சிறப்பாக திறமையை வெளிபடுத்திய மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.நிகழ்ச்சியில் பல்கலைகழக  துணை வேந்தர் சாஸ்திரி, இளங்கலை இயக்குனர் ரகுநந்த ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Judge ,Sample Court Competition: Supreme Court ,Law College Students ,Sample Court Competition: Law College Students for the Supreme Court , Sample Court Competition: Supreme Court Judge Prize for Law College Students
× RELATED நீதிபதியிடம் சிக்கிய...