×

அதிமுக தலைமை அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தினவிழா: ஓ.பி.எஸ். நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

சென்னை: அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் விழா, சர்வதேச மகளிர் தினவிழா ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான  ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.தொடர்ந்து அவர் ஒருவருக்கு லேப்டாப், 4 பேருக்கு கிரைண்டர், 20 பேருக்கு தையல்  மெஷின், 27 பேருக்கு அயர்ன்பாக்ஸ், 30 பேருக்கு இட்லி பாத்திரம், 200 பேருக்கு எவர்சில்வர் குடம், 100 பேருக்கு அன்னகூடை, 200 பேருக்கு 11/2 லிட்டர் ஹாட்பாக்ஸ், 6 பேருக்கு தள்ளுவண்டி, 1200 பேருக்கு புடவை முதலான நலத்திட்ட  உதவிகளை வழங்கினார். 2000 பேருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

Tags : International Women's Day ,AIADMK Headquarters ,OPS , International Women's Day at AIADMK Headquarters: OPS Provided welfare assistance
× RELATED 3000 பேருக்கு நலத்திட்ட உதவி