×

அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தமிழில் கணக்கீட்டாளர் தேர்வு நடத்த திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கணக்கீட்டாளர் தேர்வினை தமிழில் நடத்தவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.தமிழக மின்வாரியம் சமீபத்தில் மின் கணக்கீட்டாளர் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பலரும் விண்ணப்பித்தனர். பிறகு சம்மந்தப்பட்ட தேர்வு ஆங்கிலத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழில் நடத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.இதேபோல பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மின்வாரியம் தேர்வை தமிழிலும் நடத்துவதாக அறிவித்துள்ளது.

மின்வாரியத்தின் அறிவிப்பில், ‘அறிவிக்கப்பட்ட கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் / கணக்கு பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு ஆங்கில மொழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் தமிழ் வழியில்  கல்வி பயின்றவர்களின் கோரிக்கையினை பரிசீலனை செய்து அவர்களின் நலன் கருதி மேற்கண்ட தேர்வினை தமிழ் மொழியிலும் நடத்திட முடிவு செய்து கணினி வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க கால அவகாசம் 23.3.2020 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையத்தை பார்க்கவும்’ எனக்கூறியுள்ளது.

Tags : parties ,election , Political parties plan to hold a rigorous election in Tamil
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...