×

குப்பை கொட்டும் இடத்தில் மர்மபொருள் வெடித்தது: முதியவரின் கால் துண்டானது

பெங்களூரு: பெங்களூரு ஆடுகோடி சரகத்திற்குட்பட்ட  ரங்கதாசப்பா லே அவுட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது.  இங்கு அப்பகுதி மக்கள் மற்றும் கிரானைட் தொழிற்சாலை கழிவுகள் கொட்டி வந்துள்ளனர்.  இந்நிலையில் நேற்று மாலை 4 மணி  அளவில் அந்த இடத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளில் இரும்பு மற்றும்  பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க  முதியவர் அஞ்சனப்பா(55) சென்றார். அவர் ஏதோ மர்மப்பொருளை ெதரியாமல் மிதித்தவுடன் பயங்கர சத்தத்துடன் வெடித்து அவரது இடது கால் துண்டானது. சத்தம் கேட்டு ஓடிவந்த குடியிருப்பு வாசிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்தை பார்வையிட்ட உதவி ஆணையாளர் நாத்ஜோஷி நிருபர்களிடம் கூறியதாவது: வெடி விபத்து நடந்த இடம் காலி நிலம். குண்டு  வெடிப்பாக இருக்க வாய்ப்பு இல்லை. கிரானைட் தொழிற்சாலையில் இருந்து  வீசப்பட்ட கழிவுகள் மீது முதியவர் கால் வைத்தபோது, வெடித்திருக்கலாம்.  தடயவியல்அறிக்கையில் வெடித்து சிதறியது என்ன என்பது பற்றி தெரியவரும் என்றார்.Tags : Mystery erupts , garbage can,old man's leg ,amputated
× RELATED மூட்டைக்கு 4 கிலோ வரை குறையும் மர்மம்...