×

மருத்துவமனையின் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் லிப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அடுக்குமாடி கட்டிடத்தில் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நிலையில், ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த சபீதா (42) என்பவர் நேற்று காய்ச்சலுக்கு சிகிச்சை பெற, தனது மகள் மற்றும் 8 மாத கைக்குழந்தையுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

அங்கு, மருத்துவரை பார்க்க மாடிக்கு செல்வதற்காக லிப்ட்டை பயன்படுத்தியுள்ளனர். லிப்ட் 3வது மாடி சென்று கொண்டிருந்தபோது, திடீரென லிப்ட் அறுந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்துள்ளது. இதில், அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது குழந்தை மயக்கமடைந்தது. இதையடுத்து அவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஐஸ்அவுஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Accident ,hospital lift Accident , Accident, hospital lift
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!