×

அறுந்து கிடந்த வயரை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

சென்னை: நீர்வரத்து கால்வாயை சீரமைக்கும்போது கால்வாயில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து பலியானார். ஸ்ரீபெரும்புதூர் அருகே கருணாகரச்சேரி, பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (55). விவசாயி. இவருக்கு சசிகலா என்ற மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று காலை 20க்கும் மேற்பட்ட, விவசாயிகள் கருணாகரச்சேரி ஏரி வரத்து கால்வாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மின் கம்பத்தில் இருந்து வயர் அறுந்து கால்வாயில் விழுந்து கிடந்துள்ளது. அப்போது கால்வாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஞானவேல் வயரை மிதித்துள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட ஞானவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் மின்சார வாரியம் மற்றும் சோமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மின்சாரத்தை துண்டித்து ஞானவேல் சடலத்தை மீட்டு பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Electricity flowed ,broken wire, trampled , farmer
× RELATED மின்நுகர்வோரை குழப்பத்தில் ஆழ்த்தி...