×

தலைவலி சிகிச்சைக்கு சென்ற வாலிபரை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்திய லண்டன் டாக்டர் கைது: அபிராமபுரத்தில் பரபரப்பு

சென்னை: அபிராமபுரத்தில் தலைவலி சிகிச்சைக்காக வந்த வாலிபரை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட லண்டன் டாக்டரை போலீசார் கைது செய்தனர். சென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் கார்த்திக் (54). லண்டனில் மருத்துவம் பயின்று டாக்டரான இவர், ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணய்யர் தெருவில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். கைராசியான டாக்டர் என்பதால் பலர் இவரது கிளினிக்கிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில், அபிராமபுரத்தை சேர்ந்த கண்ணன் (20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு கடுமையான தலை வலி இருந்ததால், சிகிச்சை பெற நேற்று முன்தினம் டாக்டர் கார்த்திக் கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அப்போது நோயாளிகள் யாரும் இல்லாததால், டாக்டர் கார்த்திக், பரிசோதனை செய்ய வேண்டும் என்று கிளினிக் பின்புறம் உள்ள அவரது அறைக்கு கண்ணனை தனியாக அழைத்து சென்றுள்ளார். அப்போது நான் சொல்லும்படி நீ செய்யவில்லை என்றால் தவறான சிகிச்சை அளித்து கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத கண்ணன் அதிர்ச்சியடைந்தார்.

உடனே டாக்டர் கார்த்திக், கண்ணனின் ஆடைகளை அகற்றி கட்டாயப்படுத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். பிறகு இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். டாக்டரின் செயலால் மனமுடைந்த கண்ணன் சம்பவம் குறித்து உடனே அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் கிளினிக்கிற்கு சென்று டாக்டரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், கண்ணனிடம் தவறாக நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து டாக்டர் கார்த்திக்கை அதிரடியாக கைது செய்தனர். இதேபோல் சிகிச்சைக்கு வந்த வாலிபர்கள் யாரேனும் இவரிடம் பாதிக்கப்பட்டுள்ளார்களா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : doctor ,London , London doctor,arrested , sexually abusing ,youth
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...