×

கேரளாவில் சிஎம்பி எம்எல்ஏ மரணம்

திருவனந்தபுரம்: கேரளாவின் சவரா தொகுதி சிஎம்பி (கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் பார்ட்டி) கட்சி எம்எல்ஏவாக இருந்தவர்  விஜயன்பிள்ளை (69). கடந்த தேர்தலில் இடது முன்னணி ஆதரவுடன் சுயேச்சை  வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 28 ஆண்டு சிஎம்பி பஞ்சாயத்து  உறுப்பினராக இருந்தார். கடந்த 2000ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில்  சேர்ந்தார். பின்னர் கருணாகரன் டிஐசி என்ற புதிய கட்சியை  தொடங்கியபோது அதில் சேர்ந்தார். பின்னர் மீண்டும் சிஎம்பியில் இணைந்தார்.  இந்த நிலையில் நுரையீரல் நோயால் கொச்சியில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அவர்சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று  அதிகாலை 3.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி விஜயன்பிள்ளை இறந்தார். அவரது  மறைவுக்கு கேரள முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : CMP MLA ,Kerala , CMP MLA,dies, Kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...