×

இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள வாரச்சந்தையை சுற்றி ஏராளமான கடைகள் உள்ளது. இதில் சந்தையின் பின்புறம் உள்ள காலி இடத்தில் குப்பை மற்றும் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பாலாற்றின் கிளையாற்றின் இரு கரைகளிலும் இதேநிலை நீடிப்பதால், பொதுமக்கள் இப்பகுதியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் அருகில் உள்ள ஓம்சக்தி அம்மன் கோயிலின் பின்புறத்திலும் சமூக விரோதிகள் மது குடித்து விட்டு காலி பாட்டில்களை போட்டு உடைத்து வருவதாலும், இறைச்சி கழிவுகளை கொட்டி வருவதாலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தொற்றுநோய்கள் பரவுமோ என பீதியில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Meat waste, disease, risk
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...