×

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா

மெல்போர்ன்: மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. லீக் போட்டிகளில் இந்திய மகளிர் அணி சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தது. பூனம் யாதவ், ராதா யாதவ் ஆகியோர் அசத்தலாக பந்து வீசி ஆட்ட நாயகி விருதை வென்றிருக்கின்றனர். எனவே மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய அணி களமிறங்கியது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்வதற்கான முழுத் தயாரிப்புடன் களம் கண்டது.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய மகளிர் அணியில் அதிகபட்சமாக பெத் முனி 78, ஹீலி 75 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்தது 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிந்த இளம் மங்கை ஷஃபாலி வர்மா 2 ரன்களுக்கு அவுட் ஆனார். அதேபோல் ஸ்மிருதி மந்தனாவும் 11 ரங்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. ரோட்ரிக்ஸ் டக் அவுட் ஆனார். இதற்கிடையில் காயம் காரணமாக இந்திய கீப்பர் பாட்டியா வெளியேறினார். கேப்டன் கவுர் 4, கிருஷ்ணமூர்த்தி 19 ரங்களும் எடுத்து அவுட் ஆகினர்.

அதிகபட்சமாக தீப்தி ஷர்மா 33 ரன்கள் எடுத்தார். ஷிகா பாண்டே ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து 18 ரன்களில் ரிச்சா கோஷ் வெளியேறினார். இறுதியாக ராதவ் யாதவ், பூனம் யாதவ் தலா ஒரு ரன்னில் அவுட் ஆன நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ரன்கள் 99 எடுத்து இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனையடுத்து 5வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Tags : Australia , Women's T20 World Cup, Champion, Australia
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...