×

நேபாளத்தில் கொரோனா பீதி: இபிஎல் டி20 தொடர் ரத்து

காத்மாண்ட்: இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பிரபலமாக இருப்பது போல, நேபாள  நாட்டில் இபிஎல் போட்டி மிகவும் பிரபலமானது. 2014ம் ஆண்டு முதல் இத்தொடர்  நடைபெற்று வருகிறது. கடைசியாக 2018ல் நடைபெற்ற இபிஎல் தொடரில்  லலத்பூர் பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்நிலையில், இந்தாண்டு நேபாளத்தில் நடத்தப்படும் எவரஸ்ட் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 14ம் தேதி தொடங்குவதாக இருந்தது.
ஆனால், கொரோனா பாதிப்பு அச்சத்தால் இத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக, அத்தொடரின் நிர்வாக இயக்குநரான அமீர் அக்தர் அறிவித்துள்ளார். இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் உள்ளிட்ட பிரபல வீரர்கள் விளையாடுகின்றனர்.

உள்ளூர் பிரபலங்களான சந்தீப் லமிச்சேன், முகமது சாசத் உள்ளிட்ட வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். நேபாள நாட்டில் கொரோனா வைரசால் இதுவரை ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது இபிஎல் போட்டி ரத்தானதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், நிர்வாக இயக்குனர் அமீர் அக்தர் கூறுைகயில், ‘இபிஎல் தொடரைத் தற்போது நிறுத்துவது வருத்தமளிக்கிறது. நேபாள மக்களின் ஆரோக்கியம் மற்றும் உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம்’ என்றார்.

Tags : Corona Panic ,Nepal , Nepal, EPL T20 Series, canceled
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது