×

சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுகளில் இன்னொரு இன்னிங்ஸ் இருக்கு..! ஓய்வு அறிவித்த ஜாபரின் எதிர்பார்ப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான வாசிம் ஜாபர் (42), 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,944 ரன்கள் எடுத்துள்ளார். 2 ஒரு நாள் மற்றும் 23 டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். தனது ஓய்வு குறித்து ஜாபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எனது முழங்கால் வலி காரணமாக நீண்ட நேரம் பீல்டிங் செய்யமுடியவில்லை.

தற்போது என்னை மேலும் தொந்தரவு செய்கிறது. எனது முதல் இன்னிங்ஸ் தான் முடிந்துள்ளது. அடுத்த இன்னிங்சை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். அது பயிற்சி, வர்ணனை என்ற தளங்களில் இருக்கக்கூடும்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

Tags : retirement ,International Cricket Jaber ,innings ,Inning , International cricket game, innings, jabarin
× RELATED பெண்ணிடம் நள்ளிரவில் விசாரணை இன்ஸ்பெக்டருக்கு கட்டாய பணி ஓய்வு