×

2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு முதன்முறையாக சச்சின் - சேவாக் ஆட்டம்: பழைய நினைவுகளுடன் மெய்சிலிர்த்த ரசிகர்கள்

மும்பை: உலக சாலைப் பாதுகாப்பை மையப்படுத்தி, கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை வைத்து உலக சாலைப் பாதுகாப்பு டி20 தொடர் நடத்தப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜண்ட்ஸ் அணி, பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் தரன் கங்கா 32 ரன்களையும், சந்தர்பால் அதிரடியாக விளையாடி அரை சதமடித்து 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிரையன் லாரா 17 ரன்னுக்கும், ஹூப்பர் 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியதால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் சச்சின் 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சேவாக் அரை சதமடித்து அசத்தினார்.
தொடர்ந்து சேவாக் - யுவராஜ் சிங் ஜோடியின் அதிரடியால் 18.2 ஓவர்களிலேயே இந்திய லெஜண்ட்ஸ் அணி வெற்றியை அடைந்தது.

இதில் சிறப்பாக விளையாடி சேவாக் 74 ரன்களை சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் வீரேந்திர சேவாக் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு முதன்முறையாக மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரின் தொடக்க ஆட்டம் பழைய நினைவுகளுடன் ரசிகர்களை ெமய்சிலிர்க்க வைத்தது. சமூக வலைதளங்களில் வீரர்களின் பழைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

Tags : 2011 World Cup ,Sachin Tendulkar ,final , World Cup final, Sachin - Sehwag
× RELATED ஹோலி பண்டிகை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!