×

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஆஸ்திரேலிய அணி சரவெடி.. இந்திய அணிக்கு 185 ரன்கள் இலக்கு

மெல்போர்ன்: மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெல்பெர்னில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. லீக் போட்டிகளில் இந்திய மகளிர் அணி சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தது. பூனம் யாதவ், ராதா யாதவ் ஆகியோர் அசத்தலாக பந்து வீசி ஆட்ட நாயகி விருதை வென்றிருக்கின்றனர்.

எனவே மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய அணி களமிறங்கியது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்வதற்கான முழுத் தயாரிப்புடன் களம் கண்டது. முதலில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஹேலி, மூனே ஆகியோர் பேட்டிங் செய்ய வந்தனர். இவர்கள் இருவரும் இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஆஸ்திரேலியாவின் ரன் வேகத்தை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியவில்லை. பவுண்டரிகளும், சிக்சர்களுமாக பந்து பறந்து கொண்டே இருந்தன.
அலைஸா ஹேலி டி20 போட்டிகளில் இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் குவித்திருந்தது.

அதன்பிறகு லேன்னிங் களத்திற்கு வந்தார். இவர்கள் இருவரும் நிலைத்து நின்று ஆடினர். 15வது ஓவரில் 50 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணியின் மூனே, தனது 9வது டி20 ஃபிஃப்டியை அடித்தார். 17வது ஓவரில் தீப்தி ஷர்மா வீசிய பந்தில் 16 ரன்களுக்கு லேன்னிங் அவுட் ஆனார்.  கடைசி ஓவரை ராதா யாதவ் வீசினார். முதல் மூன்று பந்துகளுக்கு தலா ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், 4வது பந்தை கேரே பவுண்டரிக்கு பறக்கவிட்டார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 185 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Tags : champions ,women ,India ,Australian , Women’s T20 World Cup, Finalist, Australian Team, Indian Team
× RELATED சில்லிபாயின்ட்..