×

சேலத்தில் தேர்வு நேரத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு அதிகரிப்பால் மாணவர்கள் அவதி

சேலம்: சேலத்தில் தேர்வு நேரத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில், கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தி வருகின்றனர். அதேநேரத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கூம்பு வடிவ ஒலிபெருக்கியால் மாணவ, மாணவிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த ஒலி பெருக்கியை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. அதையும் தாண்டி தற்போது கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திருவிழாக்களுக்கு போலீஸ் அனுமதி கொடுக்கும்போது கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பயன்படுத்த கூடாது என்று விதிமுறைகளை விதிக்கின்றனர். அதன் பின்னர் போலீசார் கண்டுகொள்வதில்லை. இதனால் ஆங்காங்கே கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து  பெற்றோர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேலம் 3 ரோடு ஜங்சன் பகுதியில் கூட கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் மாணவ, மாணவிகளின் கவனம் திசை திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் போலீசார் அக்கறை காட்டாமல் இருப்பது வேதனை அளிப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதில் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : exam ,Salem ,Speakers , Speakers
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை