×

காவலர்களுக்கு 8 மணி நேரம் பணி கொண்டு வர வேண்டும்: ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் வலியுறுத்தல்

தஞ்சை:  தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தேவன் தலைமை வகித்தார். கூட்டத்தில், காவல்துறை மற்றும் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசாணை எண்.15/2010ன்படி பணியில் சேர்ந்த நாள் முதல் 25 ஆண்டுகள் முடிந்த தேதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வை ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கும் வழங்கி தனி ஆணை பிறப்பிக்க வேண்டும். நீதிமன்றத்தில் காவலர்கள் தொடுத்த வழக்கை ஏற்று அரசு மேல்முறையீடு செய்யும் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். காவல்துறையினருக்கு தனி ஊதியக்குழு அமைக்க வேண்டும்.

காவலர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். வழக்கு முடியும் வரை எதிரிகளுக்கு பிணையில்லா சட்ட சரத்தை கொண்டு வர வேண்டும். காவலர்களுக்கு அடிப்படை ஊதியம் 9300 - 34800 தர ஊதியம் ₹4800 கொண்டு வர வேண்டும். காவலர்களுக்கு 8 மணி நேரம் பணி செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும். வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Tags : guard ,Tiger Welfare Society , Guards, retired Guard Tiger Welfare Society
× RELATED கார் ஓட்டுநர் பலியான விவகாரத்தில்...