×

கிருஷ்ணகிரி அருகே பாலிடெக்னிக் கல்லூரிக்கு போதையில் வந்ததை ஆசிரியர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை: போலீசுக்கு தெரியாமல் சடலம் புதைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன் சடலத்தை போலீசுக்கு தெரியாமல் உறவினர்கள் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரியை அடுத்த தேவசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசீலன் மகன் சந்திரகாந்த்(18). இவர் கந்திகுப்பம் அருகே ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 26ம் தேதி, சந்திரகாந்த் மது போதையில் கல்லூரிக்கு வந்துள்ளார். இதை அறிந்த விரிவுரையாளர், சந்திரகாந்தை கண்டித்ததுடன் அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், அன்று மாலை வீட்டிற்கு வந்ததும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது சடலத்தை பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதைத்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கட்டிகானப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகா
ரளித்தார். அதன் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே, அந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பிரபாகரன், கந்திகுப்பம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.  அதில் சந்திரகாந்த் தந்தை ஞானசீலன் உட்பட2 பேர் கல்லூரிக்கு வந்து தன்னிடம் தகராறு செய்து, அலுவலக நாற்காலியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Student ,suicide ,polytechnic college ,teacher ,Krishnagiri Krishnagiri , Krishnagiri, Polytechnic College, Teacher, Student Suicide
× RELATED வாக்கு எண்ணிக்கை மையமான அரசு...