×

தென் ஆப்ரிக்கா ஹாட்ரிக் வெற்றி

பாட்செப்ஸ்ட்ரூம்: ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. சென்வெஸ் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன் குவித்தது. வார்னர் 4, கேப்டன் பிஞ்ச் 22, ஸ்மித் 20 ரன்னில் வெளியேறினர். ஷார்ட் 36, மிட்செல் மார்ஷ் 32 ரன் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய மார்னஸ் லாபுஷேன் 108 ரன் (108 பந்து, 8 பவுண்டரி) விளாசினார். ஜை ரிச்சர்ட்சன் 24, கேன் ரிச்சர்ட்சன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 45.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தியது. மாலன் 23, கேப்டன் டி காக் 26, ஸ்மட்ஸ் 84 ரன், கைல் வெரிய்ன் 50 ரன் விளாசினர். ஹெய்ன்ரிச் கிளாசன் 68 ரன் (63 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), டேவிட் மில்லர் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.


Tags : South Africa ,hat-trick , South Africa, hat-trick win, Australian team
× RELATED தென்னாப்பிரிக்காவில் புற்றுநோயால்...