×

ஐஎஸ்எல் கால்பந்து பைனலில் சென்னை

கோவா: ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட சென்னையின் எப்சி அணி தகுதி பெற்றுள்ளது.கோவா அணிக்கு எதிராக சென்னையில் நடந்த அரை இறுதி-1 முதல் கட்ட ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய சென்னையின் எப்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வென்று முன்னிலை வகித்தது. இந்த நிலையில், 2ம் கட்ட ஆட்டம் கோவா நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாக விளையாடிய கோவா வீரர்கள், சென்னையின் எப்சி அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். சென்னை அணியின் கோயன் 10வது நிமிடத்தில் ‘ஓன் கோல்’ அடிக்க, கோவா 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்து 21வது நிமிடத்தில் மொர்டாடா ஃபால் கோல் அடித்து 2-0 என முன்னிலையை அதிகரித்தார். இடைவேளை வரை இதே நிலை நீடித்தது.

இரண்டாவது பாதியில் தாக்குதலை தீவிரப்படுத்தி சென்னையின் எப்சி அணிக்கு சாங்டே 52வது நிமிடத்திலும், வல்ஸ்கிஸ் 59வது நிமிடத்திலும் கோல் அடிக்க 2-2 என சமநிலை ஏற்பட்டது. கடைசி கட்டத்தில் உத்வேகத்துடன் விளையாடிய கோவா அணிக்கு, 81வது நிமிடத்தில் எடு பெடியா, 83வது நிமிடத்தில் மொர்டாடா ஃபால் கோல் அடித்து நம்பிக்கை அளித்தனர். ஆட்ட நேர முடிவில் 4-2 என்ற கோல் கணக்கில் கோவா அணி வெற்றியை வசப்படுத்தினாலும், மொத்த கோல் அடிப்படையில் சென்னை அணி 6-5 என முன்னிலை வகித்ததால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.Tags : Chennai ,ISL Football Final , Chennai , ISL Football Final
× RELATED சேலம் விமான சேவை துவக்கம்: சென்னையில் இருந்து 42 விமானங்கள் இயக்கம்