×

உனக்காக... எல்லாம் உனக்காக!

ஆஸ்திரேலிய அணி வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி அலிஸ்ஸா ஹீலி, ஆஸி. மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் ஆவார். மகளிர் டி20 உலக கோப்பை பைனலில் இந்தியாவுடன் இன்று ஆஸ்திரேலியா மோத உள்ளதால், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து விலகிய ஸ்டார்க் மெல்போர்ன் வந்துள்ளார். ‘உலக கோப்பை பைனலில் அலிஸ்ஸா விளையாட உள்ளது மிகவும் சிறப்பானது. அதுவும் மெல்போர்னில் நடக்கும் போட்டி என்பதால், நேரில் பார்த்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன்’ என்கிறார் ஸ்டார்க். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடந்த முதல் 2 ஒருநாள் போட்டியிலும் ஆஸி. அணி தோல்வியைத் தழுவி தொடரை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Australian team, fast bowler Mitchell Starc
× RELATED மின்சாரத்தை மீட்டெடுக்க எங்களால்...