×

எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷனாக மாறும் பிஎஸ்என்எல் அலுவலகங்கள்: நாடு முழுவதும் 1000 இடங்களில் அமைக்க திட்டம்

நாகர்கோவில்: எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷனாக பிஎஸ்என்எல் அலுவலகங்கள் மாற இருக்கிறது. நாடு முழுவதும் முதல்கட்டமாக 1000 இடங்களில் இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வில் சென்ற நிலையில் பிஎஸ்என்எல் கட்டிடங்கள் பலவும் வாடகைக்கு விடும் நிலைக்கு பிஎஸ்என்எல் நிர்வாகம் வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் செய்ய வசதியாக பிஎஸ்என்எல் கட்டுப்பாட்டில் உள்ள 1000 அலுவலக கட்டிடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. நாடு முழுவதும் இதுவரை ஏசி (ஆல்ட்டர்னேட்டிவ் கரண்ட்) 3 ஆயிரம் சார்ஜிங் மையங்களும், டைரக்ட் கரண்ட் 175 சார்ஜிங் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க இடம் கொடுப்பது, அதற்கு தேவையான மின்சாரம் வழங்குவது பிஎஸ்என்எல் நிறுவனம் ஆகும். இடத்திற்கு வாடகை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டியது வரும். இது தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் பிஎஎஸ்என்எல் நிறுவனம் மின்சாரம் வழங்க வேண்டிய நிலையில் இது பிஎஸ்என்எல்க்கு எந்த அளவு லாபத்தை வழங்கும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. எலெக்ட்ரிக் சார்ஜிங் மையங்கள் அமைத்தல், செயல்படுத்துதல் ஆகியவற்றை இஇஎஸ்எல் நிறுவனம் நேரடியாக மேற்கொள்ளும். அதற்கு பணியாளர்களை நியமித்தல், அவர்களுக்கு சம்பளம் வழங்குதல் ஆகியவையும் அந்த நிறுவன பணியாக இருக்கும். நாடு முழுவதும் முக்கிய நகர பகுதிகளில் முதல்கட்டமாக இந்த எலெக்ட்ரிக் சார்ஜிங் மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. நஷ்டத்தில் இயங்கி வருகின்ற பிஎஸ்என்எல் நிறுவனத்தை லாபத்திற்கு கொண்டு வரும் நோக்கில் இது செயல்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக போதிய பார்க்கிங் வசதி உள்ளிட்ட கட்டிடங்கள் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்க இருக்கிறது.

Tags : BSNL Offices ,Charging Station ,locations , Offices of Electric, Vehicle Charging Station, BSNL
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு