×

பாடி டூ பாடி மசாஜ்... ஹேப்பி என்ட்... ஜோர்

கோவை புறநகர் பகுதிகளில் மசாஜ் சென்டர்கள் பெயரில் விபசார விடுதிகள் சர்வ சாதாரணமாக இயங்கி வருகின்றன. குறிப்பாக, ஜி.என்.மில்ஸ், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், இடையர்பாளையம் டிவிஎஸ் நகர், வடவள்ளி, தொண்டாமுத்தூர், வாளையார், க.க.சாவடி பகுதிகளில் பல்வேறு பெயர்களில் இந்த மசாஜ் சென்டர்கள் இயங்குகின்றன. பாடி டூ பாடி மசாஜ் ரூ.4,500, டாப்லெஸ் ரூ.1,500, ஹேப்பி என்ட் ரூ.1000 என பட்டியல் போட்டு, சமூக வலைதளங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் இழுக்கப்பட்டு, இச்சட்ட விரோத செயல் ஜரூராக நடக்கிறது.

ஏசி பெட், குளியலறை வசதியும் உள்ளது. 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் மட்டுமே மசாஜ் செய்கிறார்கள். மசாஜ் சென்டர்கள் நடத்த வேண்டுமென்றால் அதற்கென உள்ள விதிமுறைகள் இங்கு முற்றிலும் மீறப்படுகிறது. கொடுக்கிறத கொடு... நடத்துறத நடத்து... என காவல் உயரதிகாரிகள் கிரீன் சிக்னல் போடுவதால் இத்தொழில் படு சூப்பராக நடக்கிறது. டாப் டூ பாட்டம் ‘கவனிப்பு’ பலமாக இருப்பதால், இச்சட்ட விரோத செயல் தொடருது என்கிறார்கள் குடியிருப்புவாசிகள்.



Tags : Massage, Happy
× RELATED 45 வயது தாயை கழற்றி விட்ட 24 வயது காதலன்...