×

கண்ணை இமை காப்பது போல பயிரை காப்பாற்றுவது விவசாயி தான்: திருவாரூரில் முதல்வர் பழனிசாமி பேச்சு

திருவாரூர்: விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்பதற்கிணங்க காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு திருவாரூரில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் திருவாரூரில் விவசாய சங்கங்கள் நடத்தும் பாராட்டு விழாவில், முதலமைச்சர் பழனிசாமிக்கு காவிரி காப்பாளன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி; விவசாயிகள் நன்மை பெறுவதற்காகவே வேளாண் சட்ட மண்டலம் தாக்கல் செய்யப்பட்டது. வெயில், மழை என்று பாராமல் உழைப்பவர்கள் விவசாயிகள். மன நிறைவோடு வாழக்கூடியவர்கள் விவசாயிகள், சொந்தக் காலிலே நிற்கக் கூடியவர்கள்.

கண்ணை இமை காப்பது போல பயிரை காப்பாற்றுவது விவசாயி தான். இந்தியாவில் 100க்கு 65 பேர் விவசாயிகளாக வாழ்கின்றனர், நானும் ஒரு விவசாயிதான் என கூறினார். மேலும் பேசிய அவர்; ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற அரசு பரிசீலனை செய்து வருகிறது. விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ரூ.650 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. நீடாமங்கலத்தில் நெல் ஜெயராமன் பெயரில் நெல் பாதுகாப்பு மையம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் மற்றும் 12 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.7.618 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ரூ.15 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் மண்டலம் அமைக்கப்படும். கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் துவங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் தொடர்பாக ஆந்திரா, தெலுங்கானா முதல்வர்களிடம் தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.


Tags : talks ,Thiruvarur ,Palanisamy ,CM , Farmer, Thiruvarur, CM
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...