×

பண்ருட்டியில் தேகளீச பெருமாளுக்கு சிறப்பு உற்சவம்

பண்ருட்டி: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் உற்சவர் தேகளீச பெருமாள் ஆண்டு தோறும்மாசிமக திருவிழா தீர்த்தவாரிக்காக கடலூருக்கு வருவது வழக்கம். இதேபோல இந்தாண்டு நாளைகடலூர் தேவனாம்பட்டினத்தில் நடைபெறும் மாசிமக தீர்த்தவாரியில்கலந்து கொள்ள கடலூர் செல்லும் வழியில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் உற்சவர்தேகளீச பெருமாள் நேற்று மாலை பண்ருட்டி வருகைதந்தார்.

பின்னர் திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் இரவு தங்கி இரவு உற்சவம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Panruti ,Tekalisa Perumal , Panruti, Thegalese Perumal
× RELATED ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறிய பாமக