×

நாகர்கோவில் எஸ்எல்பி பள்ளியில் அவலம்: பாரம்பரிய பள்ளியில் பாழடைந்த மைதானம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணி நடந்தபோது கட்டுமான பொருட்கள் மற்றும் பழைய கட்டிடத்தை இடித்த இடிபாடுகள் அனைத்தும் அருகில் உள்ள எஸ்எல்பி அரசு மேல்நிலை பள்ளி கால்பந்து மைதானத்தில் கொட்டி வைக்கப்பட்டது. இதனால் கல்பந்து மைதானத்தில் விளையாட தடை செய்யப்பட்டது. இதையடுத்து மைதானத்தில் நடந்து வந்த விளையாட்டு பயிற்சி, காலை மற்றும் மாலையில் நடந்த நடைபயிற்சி அனைத்தும் தடைபட்டது.

தற்போது நீதிமன்ற கட்டிட பணி முடிவடைந்து மைதானத்தில் குவித்துவைக்கப்பட்டிருந்த மண் மற்றும் கட்டுமான பொருட்கள் அகற்றப்பட்டுவிட்டன. ஆனால் மைதானம் சீரமைக்கப்படவில்லை. இதனால் தற்போது மைதானம் செடி கொடிகள் புல் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு விளையாடவோ, நடக்கவோ தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இது விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் பின்டைவை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பாரம்பரியமிக்க பள்ளியில் மிக முக்கியமான விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படாமல் பாழடைந்து கிடப்பது முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நிர்வாகி சிதம்பர நடராஜன் மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்ைம கல்வி அலுவலருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில், பாரம்பரியமிக்க எஸ்எல்பி பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற தடையில்லாத சூழலை உருவாக்க வேண்டும். மேலும் பள்ளியின் பாரம்பரியம் கெட்டுவிடாமல் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : school ,SLP ,Nagercoil ,stadium ,SLP School , In Nagercoil, SLP school, dilapidated grounds
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி