×

யெஸ் வங்கி ஏடிஎம் மற்றும் ஆன்லைன் முடக்கம்: பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் ஆவேசம்

புதுடெல்லி: நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் யெஸ் வங்கியில் பணம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் ஆவேசமடைந்துள்ளனர். நாடெங்கும் 1,122 கிளைகளை கொண்ட யெஸ் வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டெபிட் கார்டு மூலம் பணம் எடுக்க முடியாமல் போனதால் ஒரே நேரத்தில் பணம் கேட்டு வாடிக்கையாளர்கள் நெருக்கடி நெருக்கடி கொடுத்ததால் பிரச்சனை ஏற்பட்டது. டெல்லி, அகமதாபாத், வாரணாசி, புவனேஷ்வர் என பல நகரங்களில் யெஸ் வங்கி ஊழியர்கள் கொடுத்த நெருக்கடியால் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

ஒரு மாதத்திற்கு வங்கியில் இருந்து ரூ.50,000 மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையில் ஏடிஎம், ஆன்லைன் பரிவர்த்தனைகளும் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். நாட்டின் 4வது பெரிய தனியார் துறை வங்கி என்ற அளவுக்கு வளர்ந்த யெஸ் வங்கி, அதே வேகத்திலேயே சரிவை சந்தித்துள்ளது. முன்னதாக, வாராக்கடன் பிரச்சனையால் முடங்கும் சூழலுக்கு சென்றுவிட்ட யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. பிரச்னைக்கு தீர்வு காணும் வரை வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Yes Bank ,customers , Yes Bank, ATM, Online Transaction, Freeze
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...