×

கம்பம் அருகே கூலிப்படையை ஏவி வழக்கறிஞரை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற சக வழக்கறிஞர்களை கைது செய்யக் கோரி சாலை மறியல்

தேனி : தேனி மாவட்டம் கம்பம் அருகே கூலிப்படையை ஏவி வழக்கறிஞரை வெட்டிக் கொலை செய்த சக வழக்கறிஞர்களை கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் மறியல் செய்த அவர்கள் வழக்கறிஞர் ரஞ்சித்தை கொலை செய்த சக வழக்கறிஞர்களை கைது செய்யக் கோரி முழக்கம் எழுப்பினர். வழக்கறிஞர் ரஞ்சித்தை கோவிந்தன்ப்பட்டி என்ற இடத்தில், மர்ம நபர்கள் நேற்று மாலை வெட்டிக் கொலை செய்தனர். முதற்கட்ட விசாரணையில் நில தகராறு காரணமாக சக வழக்கறிஞர்கள் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிலத்தகராறில் 2 தரப்பினரும் மோதிக் கொண்ட காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளனர். வழக்கறிஞர் ரஞ்சித் கொலை தொடர்பாக 3 வழக்கறிஞர்கள் 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.தலைமறைவாகி உள்ள குற்றவாளிகளை அவர்கள் தேடி வருகின்றனர். மேலும்,  குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் நடந்த இடம் 24 மணிநேரமும் வாகன போக்குவரத்து உள்ள பரபரப்பான சாலையாகும். டூவீலரில் சென்ற வக்கீலை சினிமாவைப்போல்,  விரட்டி வந்து காரில் மோதிவிட்டு கீழே இறங்கிய ரஞ்சித்தை கும்பல் ஓட, ஓட விரட்டி  சரமாரியாக அரிவாளால் வெட்டியது குறிப்பிடத்தக்கது.


Tags : lawyers ,arrest ,AV lawyer ,aviator ,search , Pole, mercenary, lawyer, arrest, road pickup
× RELATED தேவசம்போர்டு முடிவில் தலையிட...