×

கொரோனா வைரஸ் பீதியால் ஜம்மு - காஷ்மீரில் பயோமெட்ரிக் வருகை பதிவு ரத்து ; ஜம்மு, சம்பா மாவட்ட ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை

ஸ்ரீநகர்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல காஷ்மீரில் மார்ச் 31-ம் தேதி வரை பயோமெட்ரிக் வருகை பதிவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, தலைநகர் டெல்லியில் ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுஅலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அதே போல மத்தியஅரசும், அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை பதிவை உறுதி செய்யும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறைக்கு இந்த மாதம் 31ந்தேதி வரை தற்காலிகத் தடை விதித்தது.

ஜம்மு - காஷ்மீரிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு ரத்து


இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு மார்ச் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக முதன்மை செயலாளர் ரோகித்கன்சால் அறிவித்துள்ளார். பயோமெட்ரிக் உபகரணத்தில்,  ஒருவர் தனது விரல் மூலம் பதிவு செய்யும்போது, அவரிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்று, மற்றொருவர் தனது கை விரலை வைக்கும் சமயம் பரவும் வாய்ப்பு உள்ளதால் பயோமெட்ரிக் வருகை பதிவேடுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊழியர்கள் அனைவரும் தங்களது வருகை பதிவேட்டில் கையெழுத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் காஷ்மீர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே, வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில் உலக அளவில் கைகுலுக்குவதோ, முத்தமிடுவதோடு கூடாது என்றும், பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுதவற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் 2 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனா பாதிப்பு அறிகுறி காணப்படும் 2 பேருக்கும் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே மருத்துவமனையில் இருந்து வெளியேறிய 2 பேரையும் மீண்டும் அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஜம்மு, சம்பா மாவட்ட ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தலைதூக்கிய கொரோனா வைரஸ்

சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 70 நாடுகளில் இந்த வைரஸ் பாதித்துள்ளது. இது, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை உலக முழுவதும் 95 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,200 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Tags : visit ,Jammu ,Kashmir ,Samba District Primary Schools , Corona, Virus, Holiday, Biometric, Jammu - Kashmir
× RELATED இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாகிஸ்தான் பரிசீலனை