×

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனின் மறைவுக்கு கமல்ஹாசன், ப.சிதம்பரம் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

 சென்னை : திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதுபெரும் திராவிட இயக்கத் தலைவரும், திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 98.கடந்த பிப்ரவரி 24ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் க.அன்பழகனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆயினும் வயதின் மூப்பு காரணமாக அவர் உடல் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் உடல் நலம் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இரவு ஒரு மணியளவில் அன்பழகன் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனின் மறைவுக்கு கமல்ஹாசன், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது.  அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் இரங்கல்

 ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திமுக கழகத்தின் மூத்த தலைவர் மற்றும் 47 ஆண்டு கால பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு அன்பழகன் அவர்களின் மறைவு குறித்து என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.  

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்

டிடிவி தினகரன்வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தி.மு.க பொதுச்செயலாளர் பெரியவர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார். 


Tags : General Secretary ,Political party leaders ,DMK ,party ,leaders ,Kamal Hassan , DMK, Secretary General Anbalakan, Ammo, General Secretary, DTV Dinakaran, P. Chidambaram, Kamal Haasan
× RELATED பிரதமர் மோடியின் பேச்சு குறித்து...