×

பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல்

சென்னை: பேராசிரியர் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கலைஞரின் உற்ற தோழராக விளங்கியவர், 43 ஆண்டுகள் தொடர்ந்து திமுக செயலாளர் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.சமூக நலம், மக்கள் நல்வாழ்வு, கல்வி மற்றும் நிதி ஆகிய துறைகளில் அமைச்சராக பணியாற்றியவர் என்றும் அவர் கூறியுள்ளார். 9 முறை சட்டமன்ற  உறுப்பினராகவும், மேலவை உறுப்பினராகவும் தமிழாய்ந்த பேராசிரியராகவும் விளங்கியவர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி முதல்வல் நாராயணசாமி, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் இரங்கல் தெரிவிததுள்ளனர்.

கண்ணீர் அஞ்சலி
மருத்துவமனையில் பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். துரைமுருகன்,  டி.ஆர்.பாலு, ஆராசா, கனிமொழி, கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பேராசிரியர் அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன்(97) உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் உயிர் பிரிந்தது.  கடந்த மாதம் 24ம் தேதியன்று மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார். அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்து, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் உயிர்பிரிந்தது. இதனை மருத்துவனை  நிர்வாகம் உறுதி செய்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக அப்பல்லோபுறப்பட்டு சென்றார். அவருடன் திமு கழகத்தின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள்  மற்றும் பலர் உடன் சென்றனர்.

Tags : MK Stalin ,party leaders ,K Anbazhagan ,DMK ,demise , Professor KAnbazhagan,DMK leader MK Stalin,party leaders,condole
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...