×

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கலாம்: நாடாளுமன்ற குழு பரிந்துரை

புதுடெல்லி: வாக்களார் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்கள் பெயரை நீக்கவும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்தாண்டு ஆகஸ்டில் மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.  இதனை தொடர்ந்து, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  தேர்தல் ஆணையத்துடன் நேரடியாக தொடர்புடையது சட்ட அமைச்சகம் என்பதால், இது தொடர்பான நடவடிக்கைகளில் சட்ட அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  இந்நிலையில், நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சகத்தின் மானிய கோரிக்கைகள் (2020-2021) குறித்த அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இதில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. ‘ஜனநாயக அரசியலில் அதிக அக்கறை கொண்டு வாக்காளர் பட்டியலை சிறப்பானதாக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்,’ என சட்ட அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழுவானது தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.



Tags : committee , Voter Card, Aadhaar, Parliamentary Committee
× RELATED காணொலி கண்காணிப்பு குழுவால் ஒப்புதல்...