×

மீண்டும் களத்தில் சச்சின், லாரா

மும்பை: சச்சின், லாரா உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் ‘ஆர்எஸ்டபிள்யூ’ டி20 கிரிக்கெட் தொடர் இன்று நவி மும்பையில் தொடங்குகிறது.  சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் இந்த தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை என 5 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா லெஜண்டு அணியில்  சச்சின் (கேப்டன்), சேவக், யுவராஜ், ஜாகிர்கான், இர்பான், அகர்கர், கைப், பாங்கர், முனாப், ஓஜா, சாய்ராஜ், சமீர் தியாகி,   குருவில்லா ஆகியோர் விளையாட உள்ளனர்.
மற்ற அணிகளில் லாரா, சந்தர்பால், ஹூப்பர், பிரெட் லீ, ஹோட்ஜ்,  ஜான்டி ரோட்ஸ், குளூஸ்னர், தில்ஷன், வாஸ், முரளிதரன், அட்டப்பட்டு உட்பட முன்னாள் நட்சத்திரங்கள் களமிறங்குகின்றனர். லீக் சுற்று மார்ச் 20ம் தேதி வரை நடக்கிறது. முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மார்ச் 22ல் நடக்கும் பைனலில் மோதுகின்றன. போட்டிகள் நவி மும்பை, புனே நகரங்களில் நடக்கும். இன்று நடக்கும் முதல் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன.

Tags : Laura ,Sachin , Sachin , Laura
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை..!!