×

ஐபிஎல் டி20 தொடர் திட்டமிட்டபடி நடக்கும்... சவுரவ் கங்குலி உறுதி

கொல்கத்தா: கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல் இருந்தாலும், ஐபிஎல் டி20 தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் டி20 தொடர் மும்பையில் மார்ச் 29ம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடர் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இது குறித்து கங்குலி கொல்கத்தாவில் நேற்று கூறியதாவது: ஐபிஎல் தொடர் நிச்சயமாக நடைபெறும். உலகம் முழுவதும் பல்வேறு தொடர்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இங்கிலாந்து அணி ஏற்கனவே இலங்கை வந்துள்ளது. தென் ஆப்ரிக்க அணி இந்தியா வந்து விளையாட உள்ளது. எந்த பிரச்னையும் இல்லை. கொரோனா அச்சுறுத்தலை கையாள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவக் குழுவின் ஆலோசனையும் பெறப்படும். அதன் அடிப்படையில் அணி நிர்வாகங்கள் செயல்பட கேட்டுக் கொள்வோம்.  இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்

Tags : series ,IPL T20 ,Sourav Ganguly , IPL T20 Series, Vurav Ganguly
× RELATED இந்திய-ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு