×

ட்வீட் கார்னர்...மாற்றம் ஒன்றுதான் மாறாதது!

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை 5-0 என கைப்பற்றி சாதனை படைத்த இந்திய அணி, அடுத்து நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் 0-3, டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. கேப்டன் கோஹ்லியும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினார். இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ள அவர் விரைவில் பழைய பார்முக்குத் திரும்புவேன் என்பதை உணர்த்தும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்று தகவல் பதிந்துள்ளார்.

Tags : Corner , Change is the only thing that doesn't change!
× RELATED உலக கோப்பை ஹாக்கியில் மாற்றம்