×

தரமணி 100 அடி சாலையில் பைக் மீது லாரி மோதி தம்பதி பரிதாப சாவு

வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த மேடவாக்கம் ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்தவர்   நீதிராஜன் (46). இவரது மனைவி பாரதி (37). நேற்று அதிகாலை நீதிராஜன் தனது மனைவி பாரதியை பைக்கில் ஏற்றிக்கொண்டு திருவான்மியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தரமணி 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி திடீரென இவர்களது பைக் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.  இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு   ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்   சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நீதிராஜன் இறந்தார்.   பின்னர் அவரது மனைவியை மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாரதி இறந்தார்.

தகவலின்பேரில் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தரமணி, அண்ணாநகரை சேர்ந்த சரவணன் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தின் 2வது மாடியில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று  கீழே குதித்தார். இதில் அவரது தலையில் அடிப்பட்டு ரத்தவெள்ளத்தில் சம்பவ   இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பரங்கிமலை போலீசார், சடலத்தை கைப்பற்றி, இவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.


Tags : road ,Taramani , Taramani, 100 ft Road, Bike, Truck, Couple
× RELATED திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில்...