×

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் உடல்நலக்குறைவால் க.அன்பழகன் (97) காலமானார்

சென்னை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார். பேராசிரியர் க.அன்பழகன் அவருக்கு வயது 97 ஆகும். வயது முதிர்வு காரணமாக அன்பழகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24 ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி க.அன்பழகன் உயிர் பிரிந்தது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் 1922 ம் ஆண்டு நாகை மாவட்டம் கொண்டத்தூரில் பிறந்தார். வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள  கொண்டத்தூர் அன்பழகன் சொந்த ஊர் ஆகும். கல்யாணசுந்தரம்-சுவர்ணாம்பாள் தம்பதியின் மகன் க.அன்பழகன் ஆவார். 43 ஆண்டுகள் தி.மு.க.வின் பொதுச்செயலாளராக அன்பழகன் இருந்து வந்தார். . க.அன்பழகன், தி.மு.க தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை கட்சியில் தொடர்ந்து இருந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் அகும். கருணாநிதி - அன்பழகன் இடையிலான நட்பு 75 ஆண்டுகள் ஆழமானது.

அண்ணாமலை பல்பலையில் பயின்றார்:
இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்தார். பேராசிரியர் க.அன்பழகனுக்கு பெற்றோர் வைத்த பெயர் ராமையா என்பதாகும். திராவிடர் கழகத்தில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக ராமையா என்ற பெயரை அன்பழகன் என்று  மாற்றிக்கொண்டார்.

மனைவி வெற்றிச் செல்வி:
திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் மனைவி பெயர் வெற்றிச்செல்வி ஆகும். அன்பழகன்-வெற்றிச்செல்வி தம்பதிக்கு செந்தாமரை மற்றும் மணமல்லி என்ற இரு மகள்கள். மகன் அன்புச்செல்வனுடன் சென்னை கீழ்ப்பாக்கம் இல்லத்தில் பேராசிரியர் அன்பழகன் வசித்து வந்தார்.

4 சகோதரர், ஒரு சகோதரி:
அன்பழகனுடன் பிறந்தவர்கள் பாலகிருஷ்ணன், அறிவழகன், திருமாறன், மணிவண்ணன் ஆகிய 4 சகோதரர்கள் ஆவர். தமிழரசி என்ற சகோதரியும் பேராசிரியர் அன்பழகனுடன் பிறந்தவர் ஆவார். சட்டமேலவை உறுப்பினராக பணியாற்றிய அறிவழகன் சில ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார். மேலும் பேராசிரியர் பாலகிருஷ்ணன், பேராசிரியர் திருமாறன், தமிழரசி மற்றும் மணிவண்ணன் ஆகிய நால்வரும் நலமுடன் உள்ளனர்.

9 முறை எம்எல்ஏ:
க.அன்பழகன், 1957- ம் ஆண்டு சென்னை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரானார். 1962 ம் ஆண்டு தமிழ்நாடு மேலைவைக்கு திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார். 1967 ம் ஆண்டு திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு  தேர்வு செய்யப்பட்டார். 1971,1977,1980 ஆகிய 3 முறை சென்னை புரசைவாக்கம் தொகுதி எம்எல்ஏ வாக தேர்வானார். 1984 ம் ஆண்டு சென்னை பூங்கா நகர் தொகுதி, 1989 ம் ஆண்டு சென்னை அண்ணா நகர் தொகுதி எம்எல்ஏ வாக தேர்வு செய்யப்பட்டார். 1996, 2001, 2006 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

4 முறை அமைச்சர்:
1971, 1989, 1996, 2006 ஆகிய நான்கு முறை அமைச்சராக க.அன்பழகன் பணியாற்றினார். சுகாதாரம், கல்வி, நிதி உள்ளிட்ட இலாக்காக்களை சிறப்பாக நிர்வகித்த பெருமை அன்பழகனுக்கு உண்டு.

திமுக வின் ஆரம்பகால தொண்டர்:
1949 ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாள் முதல் இறக்கும் வரை திமுக உறுப்பினர்.

பொதுச் செயலாளர் அன்பழகன்
திமுக பொருளாளராக பணியாற்றி வந்த அன்பழகன் 1977 ம் ஆண்டு பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 முதல் 2006 வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக பணியாற்றியவர்.

கலைஞர் - பேராசிரியர் நட்பு:
கலைஞருக்கும் பேராசிரியருக்கும் இடையே நட்பு 1942ம் ஆண்டில் தொடங்கியது. திருவாரூரில் 1942 ம் ஆண்டு  நடந்த சிக்கந்தர் விழாவில்  அண்ணாவுடன் வந்து அன்பழகனை சந்தித்து கலைஞர் பேசினார். 1942 ம் ஆண்டு தொடங்கிய நட்பு 2018 கலைஞர் காலமானது வரை நீடித்தது. அண்ணாமலை பல்கலையில் படிக்கும் போது அன்பழகனை அழைத்து திருவாரூரில் கலைஞர் கூட்டம் நடத்தினார். திருவாரூர் கூட்டத்தில் கலந்து கொண்ட நாள் முதல் அன்பழகன், கலைஞரின் நண்பர் ஆனார்.

பெரியாரின் வழித் தோன்றல்:
அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்த நாள் முதல் பெரியாரின் தொண்டர் ஆவார்.

நூல் ஆசிரியர் அன்பழகன்:
இனமொழி ,வாழ்வுரிமைப் போர், வாழ்க திராவிடம், தமிழர் திருமணமும் இனமானமும் உள்ளிட்ட நூள்களின் ஆசிரியர் ஆவார்.

அதிக காலம் மக்கள் சேவை:
தமிழக அரசியல் தலைவர்களில் மிக அதிக காலம் மக்கள் சேவை ஆற்றியவர்.

Tags : K. Annabhagan ,K. Anbazhagan , DMK General Secretary, Prof. K. Anbazhagan, has passed away
× RELATED கோவை மாவட்ட திமுக இரண்டாக...