×

பேராசிரியர் ஆபாசமாக திட்டியதால் கல்லூரி 3-வது மாடியிலிருந்து மாணவி குதித்தார்: மாணவர்கள் சாலை மறியல்

வில்லியனூர்: ராக் கல்லூரி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பரமேஸ்வரி மகள் ப்ரித்திகா(18). வில்லியனூர் அடுத்த தமிழக பகுதியான பெரம்பையில் இயங்கும் ராக் கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.  நேற்று காலை 11.30 மணியளவில் இடைவேளையின் ேபாது திடீரென  கல்லூரியின் மூன்றாம் தளத்தில் இருந்து ப்ரித்திகா கீழே குதித்துள்ளார். இவரது  அலறல் சப்தம் கேட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியே  ஓடிவந்து பார்த்தபோது மாணவி ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார்.

உடனே அவரை மீட்டு மூலகுளம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு முகம், தாடை மற்றும் கை, கால் உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் ேமல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து  வருகின்றனர்.  இதுகுறித்து கோட்டக்குப்பம்  போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதனை கண்டித்து பெரம்பை வில்லியனூர்  சாலையில் மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த மாணவர்கள் கூறுகையில், ப்ரித்திகா வகுப்பறை முன் நின்று  கொண்டு திண்பண்டங்களை சக மாணவனுடன் பகிர்ந்து கொள்ளும்போது, துறை தலைவர் பார்த்துவிட்டார். என்ன? நடந்தது என விசாரிக்காமல்  மாணவியை ஆபாசமாக திட்டியுள்ளார்.

இதனால் ப்ரத்திகா அவமானம் தாங்கமுடியாமல், மனமுடைந்து கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனவே  தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற னர். பின்னர்  கல்லூரி நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணிநீக்கம் செய்வதாக போலீசாரிடம் உறுதியளித்தனர். இதனையேற்று மறியலை கைவிட்டு  அனைவரும் கலைந்து சென்றனர். 2 மணிநேரமாக நடந்த  மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : student ,road , professor, scolds, student jumps ,road
× RELATED காட்பாடியில் கல்லூரி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி