×

ரஜினி குறித்து கருத்து கூற மறுப்பு அதிமுக கூட்டணியில் பாமக தொடரும்: ராமதாஸ் பேட்டி

திருவண்ணாமலை: அதிமுக கூட்டணியில் பாமக தொடரும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.திருவண்ணாமலையில் நேற்று முன்னாள் எம்எல்ஏ எதிரொலி மணியன் இல்லத் திருமண விழாவை, பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தி வைத்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பாமகவை பலப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். தேர்தல் கூட்டணி குறித்து இப்போது கேட்க வேண்டாம். தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் கூட்டணி குறித்து பேசுவார்கள்.

அதிமுக கூட்டணியில் தற்போது பாமக தொடர்கிறது, தொடருவோம். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்இவ்வாறு ராமதாஸ் கூறினார்.தொடர்ந்து, ரஜினிகாந்த் நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்த கேள்விக்கு, பதில் அளிக்க மறுத்துவிட்டார்.பேட்டியின்போது, பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Ramadas ,Rajini Alliance , Refusing, AIADMK, Ramadas
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்