×

விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருந்த சீன தொழிலதிபர் திருப்பி அனுப்பப்பட்டார்

சென்னை: சீன நாட்டை சேர்ந்த ஹாங்சான் (43), தொழிலதிபர். இவர் தொழில் விஷயமாக சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்தார். இவரது விசா காலம், கடந்த பிப்ரவரி 24ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அதற்கு பிறகும், அவர் சீனா செல்லவில்லை. இது குடியுரிமை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவர் திருச்சியில் இருப்பது தெரிந்தது.
அவர்கள் அவரை பிடித்து, சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், ‘‘நான் வந்த வேலை இன்னும் முடியவில்லை.

அதனால், எனது விசா காலத்தை சில வாரங்களுக்கு நீடித்து தரவேண்டும்’’ என்றார். கொரோனா வைரஸ் காரணமாக சீனா உள்ளிட்ட 12 நாட்டினருக்கு இந்தியா வர விசா வழங்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஹாங்சானின் விசாவை நீடிக்க முடியாது என்று கூறி அதிகாரிகள் நிராகரித்தனர். இதையடுத்து அவரை நேற்று அதிகாலை 1.30 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் ஏர்ஏசியா விமானத்தில் சீனாவுக்கு அனுப்பிவைத்தனர்.



Tags : businessman ,Chinese , Stayed, expiry ,visa period, Chinese businessman,
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...