×

மேகாலயா மாணவர்களுக்கு 11 லட்சம் மதிப்பிலான உதவிகள்

கிருஷ்ணகிரி: மேகாலயா மாநில மலைக்கிராம மாணவர்களுக்கு 11 லட்சம் மதிப்பிலான உதவிகளை ஐவிடிபி நிறுவனர் வழங்கினார். கிருஷ்ணகிரி ஐவிடிபி தொண்டு நிறுவனம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா மாநில குழந்தைகளுக்கும் பல்வேறு கல்விச்சேவைகளை வழங்கி வருகிறது. அம்மாநிலங்களில் அடிப்படை வசதியின்றி வறுமையில் வாழ்ந்து வருபவர்களுக்கு உதவும் பொருட்டு இந்திய- பங்களாதேஷ் எல்லை பகுதியில் அமைந்துள்ள மின்விளக்கு வசதி கூட இல்லாத மக்கன்ரூ மலைகிராமத்தின் சுற்றுப்புற கிராமங்களுக்கு, ₹6 லட்சம் மதிப்பிலான ஆயிரம் சோலார் மின்விளக்குகளும், ₹5 லட்சம் மதிப்பிலான அறிவியல் ஆய்வகம், டிவிகள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் குளிர்கால ஆடைகள் வழங்கப்பட்டன.

இது குறித்து ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தைபிரான்சிஸ் கூறுகையில், ‘நாடு சுதந்திரம் அடைந்து இதுவரை இக்கிராமத்திற்கு மின்வசதி இல்லை. இக்கிராம மக்களுக்கும், குழந்தைகளுக்கும் சோலர் மின் விளக்குகளை வழங்கியுள்ளேன். இப்பகுதி மக்களின் நலனுக்காகவும், கல்வி மேம்பாட்டிற்காகவும் இப்பகுதியில் செயல்படும் ஹோலிகிராஸ் பள்ளியின் வாயிலாக, இதுவரை ₹45 லட்சம் மதிப்பிலான பல்வேறு சேவைகளை எங்கள் ஐவிடிபி நிறுவனம் வழங்கியுள்ளது,’ என்றார்.


Tags : Meghalaya , 11 lakhs worth of assistance to Meghalaya students
× RELATED மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு