×

சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதை ஒட்டி காவல் நிலையங்களுக்கு சென்னை காவல் ஆணையர் அறிவுரை

சென்னை: மார்ச் 9 முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதை ஒட்டி காவல் நிலையங்களுக்கு சென்னை காவல் ஆணையர் அறிவுரை வழங்கியுள்ளார். பெண்கள், சிறுவர், சிறுமியர், நோய்வாய்ப்பட்டோர், முதியோரை விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்து வரக்கூடாது என்றும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குடிகாரர்களையும் எக்காரணம் கொண்டும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைக்கக்கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் காவல்நிலையத்துக்கு பிடித்து வந்தாலும் பாதுகாப்பாக வைத்து விசாரணையை முடிக்க வேண்டும். காவல் நிலையத்தில் உள்ள சிறையறையில் குற்றவாளிகள் யாரையும் அடைத்து வைக்க்கூடாது. வழக்கு தொடர்பாக யாரையும் கைது செய்தால் உடனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். காவல் நிலையத்தில் கைதிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் நடக்காத வகையில் செயல்பட வேண்டும என அறிவுறுத்தியுள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் காவல் நிலையங்களில் தரப்படும் சிறிய புகார்களும் பெரிதுப்படுத்தப்படும் என ஆணையர் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Police Commissioner ,police stations ,Chennai ,commencement ,assembly , Assembly, Police Stations, Chennai Police Commissioner
× RELATED சென்னையில் காவல் நிலையங்களில்...