×

சென்னை அண்ணா மேம்பாலம் குண்டு வீச்சு வழக்கில் மேலும் 3 பேர் தென்காசி நீதிமன்றத்தில் சரண்

தென்காசி: சென்னை அண்ணா மேம்பாலம் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 பேர் சரணடைந்திருக்கக்கூடிய நிலையில், தற்போது மேலும் 3 பேர் தென்காசி நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள். சென்னை தேனாம்பேட்டையில் காவல் நிலையத்திற்கு அருகில் வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தாக்குதல் நடத்துவோரையும், தாக்குதலுக்கு உள்ளானவர்களையும் தீவிரமாக தேடி வந்தார்கள். இந்த நிலையில் தான் நேற்று மதுரை நீதிமன்றத்தில் அம்ருதீன், ராஜசேகர், ஜான் உள்ளிட்ட 4 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள். இதேபோன்று தென்காசியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சதீஸ், ஹரீஷ், தமிழ்ச்செல்வன் என்கின்ற மேலும் 3 பேர் சரணடைந்திருக்கின்றனர். இந்த மூன்று பேரும் தண்டையார்பேட்டையை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இவர்கள் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதில் முக்கியமான தொடர்பு இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் அதற்கான மனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

தற்போது மதுரையில் சரணடைந்திருக்கின்ற 4 பேரை அழைத்து வருவதற்காக சென்னையில் இருந்து தனிப்படையானது மதுரை விரைந்திருக்கிறது. இதேபோன்று தென்காசி நீதிமன்றத்தில் சரணடைந்த 3 பேரையும் அழைத்து வருவதற்காக தனிப்படையானது இன்னும் சற்று நேரத்தில் புறப்படவுள்ளதாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் சென்னை அழைத்து வரப்பட்டு, எதற்காக தாக்குதல் நடைபெற்றது? யாரை தாக்கினார்கள்? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ரவுடிகள் மோதல் காரணமாக தான் இந்த நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த ரவுடிகள் யார்? என்ன? என்பது குறித்து அவர்களிடம் வாக்குமூலம் பெற்று, அதன் அடிப்படையில் ரவுடிகளை கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Chennai ,Anna Bridge , Chennai, Anna Bridge, Bombing, 3 people, Tenkasi Court, Saran
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...