×

கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருப்பது தவறு :மருத்துவர்கள்

சென்னை : கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவாது என்று மருத்துவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருப்பது தவறு என்று அவர்கள் கூறியுள்ளனர். பல்வேறு ஆய்வுகளில் கொரோனா காற்று மூலம் பரவாது என்று தெரியவந்து இருப்பதாக சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில்அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்களும் இதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

கொரோனா பாதித்தவர்கள் தொட்ட இடங்களில் வைரஸ் 12 மணி நேரம் உயிரோடு இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே அந்த இடங்களை தொட்டு முகத்தில் வைப்பவர்களுக்கே கொரோனா பாதிக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். வன உயிரினங்களை பச்சையாக சாப்பிடுவதே சீனாவில் நோய் பரவ காரணம் என்று சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை உயிரினங்களை சமைத்து வேகவைத்து சாப்பிடுவதால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவில் தலைதூக்கிய கொரோனா வைரஸ்

சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 70 நாடுகளில் இந்த வைரஸ் பாதித்துள்ளது. இது, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை உலக முழுவதும் 95 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,200 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. எனவே பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது இன்றியமையாததாக உள்ளது.

Tags : Vijayabaskar ,Doctors , Corona, Virus, Doctors, Lifespan, Air, Health Department, Vijayabaskar
× RELATED ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை...