×

தெலுங்கானாவில் பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி

வனபர்த்தி: தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். கோபால்பேட்டாவில் 5ம் வகுப்பு மாணவிகளுக்கு வீட்டில் பாடம் நடத்துவதாக கூறி பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் சரத் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு படிக்க வரும் 5ம் வகுப்பு மாணவிகளிடம் குடிபோதையில் தவறாக நடந்துகொண்டதாக கூறி சரத் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தன்னிடம் படிக்க வந்த 10 சிறுமிகளை தினந்தோறும் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் சரத் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


Tags : Teacher raping school children ,Telangana Teacher ,Telangana ,school students , Telangana, Schoolgirls, Rape, Teacher
× RELATED முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் 1000 அபராதம்: தெலங்கானா அரசு அதிரடி