×

7 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூச்சல், குழப்பம் காரணமாக நாடாளுமன்ற மக்களவை தொடர்ந்து, 5வது நாளாக முடங்கி இருக்கிறது. இதற்கிடையே 7 காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகம் முன்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பிக்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியேயும், நாடாளுமன்றத்திற்குள்ளேயும், எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். 7 எம்.பிக்களின் சஸ்பெண்டை எதிர்த்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதன் காரணமாக மக்களவை இன்று 5வது நாளாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. கடந்த திங்கட்கிழமையிலிருந்து நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த 23ம் தேதிலியிலிருந்து தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இடதுசாரி கட்சிகள் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களவையின் அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்திருந்தார்கள். ஆனால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக மக்களவை மற்றும் மாநிலங்களவை சரியான முறையில் செயல்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. இந்நிலையில் மக்களவையில் டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் மக்களவை சபாநாயகர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து அவை நடைபெற்று கொண்டிருந்ததால், காங்கிரஸ் எம்.பிக்கள்  சபாநாயக்கர் இருக்கைக்கு அருகில் சென்று அவர் கையிலிருந்த காகிதத்தை கிழித்து எறிந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு நேற்று 7 காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஏராளமானோர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 7 எம்பிக்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து, டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.


Tags : MPs ,parliament ,Congress , 7 MPs, Suspend, Parliamentary Complex, Congress Party, Struggle
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...