சங்ககிரி அருகே கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பு வைர நகைகள் தருமபுரியில் மீட்பு

சேலம்: சங்ககிரி அருகே பிப்ரவரி 9ம் தேதி கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பு வைர நகைகள் தருமபுரியில் மீட்கப்பட்டுள்ளன. ஐதரபாத்தில் இருந்து கோவையில் உள்ள நகை வியாபாரிக்கு விற்க கவுதம் என்பவர் வைர நகைகளுடன் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது, சங்ககிரி சுங்கச்சாவடி அருகே பேருந்து நின்றபோது கவுதமிடம் இருந்து மர்மநபர்கள் வைர நகைகளை கொள்ளையடித்து தப்பினர். இதையடுத்து, கொளளை குறித்து விசாரணை நடத்திய போலீசார், நகைகளுடன் தப்பியோர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்தனர். திருட்டு நகைகளை வாங்கிக் கொள்வதாக கொள்ளையர்களுடன் பேசி சேலம் போலீசார் வரவழைத்துள்ளனர்.

Related Stories: