×

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து தமிழக பக்தர்கள் புறப்பட்டனர்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து தமிழக பக்தர்கள் படகில் புறப்பட்டனர்.உளவு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பின் பக்தர்களை அனுப்பி வைத்தனர்.  கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா இன்று  தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி திருச்சிலுவை ஆராதனை, சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடக்கிறது. இலங்கை மற்றும் தமிழகத்தை சேர்ந்த பாதிரியார்கள் இணைந்து திருப்பலி பூஜை நடத்துகின்றனர். இவ்விழாவில் இலங்கையை சேர்ந்த 6 ஆயிரம் பக்தர்களும், தமிழகத்தை சேர்ந்த 3 ஆயிரம் பக்தர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை அரசு செய்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு இவர்கள் படகில் கச்சத்தீவு செல்வதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 75 விசைப்படகுகள் மற்றும் 25 நாட்டுப்படகுகளில் பக்தர்கள் கச்சத்தீவிற்கு புறப்பட்டு சென்றனர்.


Tags : Pilgrims ,Tamil Nadu ,Rameswaram ,Temple Festival ,Kachchativu St. Anthony ,St. Anthony ,Kachchativu , Rameswaram, Kachchativu, St. Anthony's Temple Festival
× RELATED திருச்சியில் இருந்து ராமேஸ்வரம்...