×

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா; ராமேஸ்வரத்தில் இருந்து பக்தர்கள் படகில் புறப்பட்டனர்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து முதல் படகு புறப்பட்டது. கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா இன்று  தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி திருச்சிலுவை ஆராதனை, சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடக்கிறது. இதை தொடர்ந்து திருப்பலி, தேர் பவனி நடைபெறும். நாளை காலை வழிபாடு, திருவிழா திருப்பலியுடன் விழா நிறைவு பெறும்.


Tags : St. Anthony ,Temple Festival ,Kachchativu ,pilgrims ,Rameswaram , Rameswaram, Kachchativu, St. Anthony's Temple Festival
× RELATED கமுதி கோயில் திருவிழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்